தமிழ்த்துறை மற்றும் தமிழ்மன்றம் இணைந்து நடத்திய இணையவழிக் கருத்தரங்கு 16.03.2026 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணி முதல் 4.15 மணி வரை நடைபெற்றது.
இந்நிகழ்வில் அந்தமான் கிருஷ்ணமூர்த்தி அவர்கள், B.E.,MBA., முன்னாள் தலைமைப் பொறியாளர், அந்தமான் துறைமுகம், “தமிழனின் கடல்சார் அறிவியல்” என்ற தலைப்பில் மிகச் சிறப்பாக உரையாற்றினார். அவர் காணொளிப் படங்களின் மூலம் சங்ககால மக்களின் வாழ்க்கை முறைகளையும், கடல்சார்ந்த தகவல்களையும் மிகவும் அழகாக எடுத்துக் கூறினார். அவர் பகிர்ந்த தகவல்கள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன. இதன் மூலம் மாணவர்கள் பல புதிய தகவல்களை அறிந்து கொண்டனர்.